நாடு முழுவதும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை அசுர வேகத்தில் உள்ளது. கடந்த 7 நாட்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 3.20 லட்சம் கொரோனா தினசரி பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
இது இன்னும் சில மாதங்களில் 5 லட்சத்தை அடையும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பல மாநிலங்களில் ஏற்கெனவே கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா எழுசியை கருத்தில் கொண்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு, கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அதன்படி இரவு நேர ஊரடங்கு, வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவறை மூடுதல், அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதியளித்தல், போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கவும், பரிந்துரை செய்துள்ளது.
To Join Whatsapp | |
To Follow FaceBook | |
To Subscribe YouTube |
0 Comments