கொரோனா முதல் தடுப்பூசியை ஆர்வத்துடன் செலுத்தி கொண்டவர்களில் ஒரு சிலரிடம் பக்க விளைவுகள் பற்றிய பயம் காரணமாக இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமாக அல்லது இரண்டாவது Dose யை எடுத்துக் கொள்ளாவிட்டால் பாதிப்புகள் ஏற்படுமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
2வது தவணை செலுத்தாமல் விடுவது தொடர்பான சந்தேகங்களை நிபுணர்களிடம் கேட்டால் இரண்டாம் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என்கிறார் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்குனராக பணியாற்றிய மருத்துவர் குழந்தைசாமி.
ஒரு நபருக்கு குறிப்பிட்ட மருந்து அலர்ஜி ஏற்படுத்தும் என்றால் அது முதல் முறை அந்த மருந்து செலுத்தப்பட்ட உடன் தெரிய வந்துவிடும்.
முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நபருக்கு பக்க விளைவுகள் ஏற்பட வில்லை என்றால் இரண்டாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறார் அவர்.
முதல் தடுப்பூசி அந்த நபருக்கு ஏற்பட்ட கொரோனாவுக்கு எதிரான குறிப்பிட்ட நோய் எதிர்ப்பாற்றல் மேலும் பெருகுவதற்கு தான் இரண்டாவது தடுப்பூசி செலுத்துகிறார்கள் அதனால் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வில்லை என்றால் அதனால் பாதிப்பு இல்லை.
ஆனால் இரண்டாவது ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு மேலும் அதிக உதவி செய்யும் என்கிறார் குழந்தைசாமி.
மேலும் விவரம் அறிய கீழே உள்ள காணொளியைப் பாருங்கள் 👇👇👇👇
நன்றி ;- பி.பி.சி. தமிழ்.
0 Comments