நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய 50,000 ஆஸ்திரேலிய டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.29,11,845) நன்கொடையாக PM cares Fund - க்கு அளிப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பின்தங்கிய ஐபிஎல் விளையாடும் போது மக்கள் படும் இன்னல்கள் கவலை அளிக்கிறது. சக வீரர்களும் தொகை கொடுத்து உதவ வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
0 Comments