Ads

பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த பள்ளிக் கல்வித்துறை



நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கு மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் முதன்மை கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற்று பணியில் இருந்து விலக்கப்பட்டு கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மற்ற ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட இதர அலுவலக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers