Ads

12 பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் - கல்வி அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் உறுதி



மாணவர்களின் படிப்பு எவ்வளவு முக்கியமோ, உடல்நலமும் அவ்வளவு முக்கியம். கொரோனா எப்போது குறைகிறதோ அப்போது தேர்வு நடத்தப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது அனைத்து பள்ளி ,கல்லூரி மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும்..? எப்படி நடைபெறும்..? என்று கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையில் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அவ்வப்போது அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டாயம் நடக்கும் கொரோனா சூழலில் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடைபெறாது, நேரடியாக நடைபெறும். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் படிப்பு எவ்வளவு முக்கியமோ, உடல்நலமும் அவ்வளவு முக்கியம். கொரோனா எப்போது குறைகிறதோ அப்போது தேர்வு நடத்தப்படும். தொற்று பரவலை மனதில் கொண்டு தேர்வு நடத்தப்படும். மாநில அரசே பிளஸ் டூ பொதுத்தேர்வு தேதியை முடிவு செய்யும். தேர்வு 3 மணி நேரம் நடத்த வேண்டும் பள்ளியிலேயே தேர்வு நடத்த வேண்டும் என்று பலர் வலியுறுத்தியுள்ளனர் என கூறினார்.


Tags:- tn 12th public exam latest news,12th public exam,tn 12th public exam,tn 12th public exam 2021,12th public exam time table,12th public exam latest news,tn 12th public exam 2021 news,12th public exam latest update,12th exam news today,tn 12th exam cancelled,tn 12th public exam 2021 latest news,#tn 12th public exam,12th exam,public exam,tamilnadu 12th public exam,tn 12th public exam cancelled,tn 12th public exam postponed,tn 12th public exam time table,tn 12th exam latest news

Post a Comment

1 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers