டெல்லி: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வழக்கமான பணிகள் துவங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காலகட்டத்தில்தான், பள்ளி மாணவ-மாணவிகள் எப்போது பழையபடி பள்ளிகளுக்கு செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பள்ளிகள் திறப்பு எப்போது என்பதுதான் பெற்றோரின் ஒரே யோசனையாக உள்ளது.
வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமாக எனதுதான் கல்வி கற்றாலும், நேரடியாக வகுப்பறையில் கிடைக்கக்கூடிய அனுபவம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
எய்ம்ஸ் இயக்குநர் பேட்டி
சரி எப்போதான், மாணவ மாணவிகளை பள்ளிகளில் திரும்ப சேர்த்து பாடம் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கலாம் என்பது பற்றி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் குலேரியா சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதுகுறித்த ஒரு பார்வை: இரண்டு முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் குறித்த பாரத் பயோடெக்கின் கோவாக்சினின் இரண்டாம் கட்ட மற்றும் மூன்று சோதனைகளின் டேட்டா எதிர்பார்க்கப்படுகிறது. அது வெற்றிகரமாக வந்து விட்டால், செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஃபைசர் தடுப்பூசியும் போடலாம்
கொரோனா தடுப்பூசி இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலின் (டி.ஜி.சி.ஐ) ஒப்புதலுக்குப் பிறகு குழந்தைகளுக்கு வழங்கப்படலாம். அதற்கு முன்னர் ஃபைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்தால், அது குழந்தைகளுக்கும் ஒரு சாய்சாக இருக்கலாம். தடுப்பூசிதான் கொரோனா பரவலை தடுத்து நிறுத்தும். எனவே, தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு, குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கலாம். இவ்வாறு குலேரியா தெரிவித்தார்.
அங்கீகாரம்
ஒரு மூத்த அரசாங்க அதிகாரியை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு தகவலில் கொரோனா தடுப்பூசி சைடஸ் காடில்லா நிறுவம், தனது ZyCoV-D தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக விரைவில் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு (டிஜிசிஐ) விண்ணப்பிக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் சைடஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.
நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் அளித்த பேட்டியில், பாரத் பயோடெக்கின் கோவாக்சினுடன் சேர்ந்து, சைடஸ் காடிலாவின் மருந்தும் குழந்தைகள் மீது சோதனை செய்யப்படுகிறது என்று கூறினார். "12 முதல் 18 வயது வரையிலான வயதில், நாட்டில் சுமார் 13 முதல் 14 கோடி மக்கள்தொகை இருக்கக் கூடும். எனவே, குழந்தைகளுக்கு செலுத்த 25 முதல் 26 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் தேவைப்படும்." என்று அவர் தெரிவித்தார்.
பள்ளிகள் திறப்பு எப்போது ?
இதுபோன்ற சுகாதாரத்துறை நிபுணர்கள் பேச்சுக்களை வைத்து பார்த்தால், தடுப்பூசி செலுத்த ஆயத்தப் பணிகள் நடக்கின்றன. ஆய்வு முடிவுகள் வந்ததும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். அதன்பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிகிறது.
To Join Whatsapp | |
To Follow FaceBook | |
To Follow Instragram |
To Follow Telegram |
To Subscribe YouTube |
Tags :- #பள்ளிகள் திறப்பு எப்போது,பள்ளிகள் திறப்பு,பள்ளி திறப்பு எப்போது,பள்ளி கல்லூரிகள் திறப்பு தேதி அறிவிப்பு,தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..?,பள்ளிகள் திறப்பு தேதி,தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு,பள்ளி,பள்ளிக் கல்வித் துறை,பள்ளிகல்வி துறை,பள்ளிக்கல்வித்துறை,கல்வித்துறை,அரசியல் செய்திகள்,பாலிமர் செய்திகள்
0 Comments