Ads

10, 11, 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் அலகுத்தேர்வு - பள்ளிக் கல்வித்துறை



தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு 2021-22 ஆண்டிற்கான அலகுத்தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ளது. அதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள போதிலும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளிகள் மூலம் நடப்பு கல்வியாண்டிற்கான புத்தகங்கள் வழங்கப்பட்டு ஆன்லைன் மூலமும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

ஒவ்வொரு பாடங்களுக்கும் ஒரு ஆசிரியர் வீதம் கால அட்டவணை தயார் செய்யப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி பேருதவி புரிகிறது.

கொரோனா பேரிடரை கருத்திற்கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதனால் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் 10, 11, 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு 2021-22 ஆண்டிற்கான அலகுத்தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ளது. அதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் தேர்வை எழுதுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அலகுத்தேர்வுக்கான வினாத்தாளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயார் செய்து மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புவார் என்று கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் கேள்விக்கான பதிலை வெள்ளை தாள்களில் எழுதி அதை தெளிவாக புகைப்படம் எழுத்து அந்தந்த பாட ஆசிரியர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும். 

மேலும் 10ம் வகுப்பிற்கு அலகுத்தேர்வு ஆகஸ்ட் 6.08.2021 முதல் 11.08.2021 வரை நடைபெறும் எனவும் 11 மற்றும் 12ம் வகுப்பிற்கு 6.08.2021 முதல் 13.08.2021 வரை அலகுத் தேர்வுகள் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers