Ads

பிளஸ் 2 துணை தேர்வுகளை தனி தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - முதல்வர் அறிவிப்பு



பிளஸ் 2 துணை தேர்வுகளை தனி தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் ஆல் பாஸ் பெற்றதாகவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது:

நமது மாநிலத்தில்‌ 2021ஆம்‌ ஆண்டு பன்னிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதுவதிலிருந்து அனைத்து மாணவர்களுக்கும்‌ விலக்களித்ததைப்‌ போல ஆகஸ்டு 2021 திங்களில்‌ நடைபெறவுள்ள பன்னிரெண்டாம்‌ வகுப்பு துணைத்‌ தேர்வுகளைத்‌ தனித்‌ தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்‌ திறனாளி மாணவர்கள்‌ அனைவரும்‌ 2016ஆம்‌ ஆண்டு மாற்றுத்‌ திறனாளிகள்‌ உரிமைகள்‌ சட்டப்‌ பிரிவு 17(1)-ன்‌ அடிப்படையில்‌ தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள்‌ அனைவரும்‌ தேர்ச்சி பெற்றதாக அறிவித்து மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers