Ads

திட்டமிட்டபடி செப்டம்பர் 1ல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாளை மறுநாள் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அந்தந்த மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் திறக்க தமிழக அரசு முடிவெடுத்து அதன்படி வழிகாட்டு நெறிமுறைகளும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.             
 இந்நிலையில், நாளை மறுநாள் முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஏற்கனவே வரும் ஒன்றாம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கான அனைத்து அரசு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு விடுதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் ஆகியவை இயங்க அனுமதிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers