நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த 18 மாதங்களாக மூடப்படிருந்தது. தற்போது கொரோனா பரவல் பல மாநிலங்களில் குறைந்து வருவதால், அந்தந்த மாநில அரசுகள் பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படுள்ளன. அந்த வகையில் ஆந்திராவில் மூடப்படிருந்த பள்ளிகள் கொரோனா கட்டுப்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு மீண்டும் திறக்கப்பட்டது.
இதேபோல், தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அந்த பள்ளி திறக்கப்படாது என்று, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இந்நிலையில், பள்ளிகள் திறப்பதில் மத்திய, மாநில அரசுகள் சற்று நிதானம் கட்ட வேண்டும் என்று, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் நவீத் விக் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,நாடு முழுவது தற்போதுவரை பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வழிகள், வகுப்புகளில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது என்று பல்வேறு சிக்கல்கள் உள்ளது.
வகுப்பு அறைக்குள் மாணவர்கள் இருக்கும் போது, கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அடுத்து வரக்கூடிய இரண்டு மாதம் முழுவது பண்டிகைக்காலம். இதனை முக்கியமாக கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பதில் மத்திய, மாநில அரசுகள் சற்று நிதானம் கட்ட வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும். ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே அமர வைக்க வேண்டும். மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கூடுதல் வகுப்பறைகள் இல்லாவிட்டால், மீதமிருக்கும் மாணவர்களுக்கு மற்றொரு நாளில் வகுப்பு நடத்த வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments