தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது
இந்நிலையில், 'பல மாதங்களாக மாணவர்கள் வீடுகளில் இருப்பதால் மன அழுத்தம் ஏற்படுகிறது; எனவே பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும்' என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களின் ஆலோசனை கேட்டு பள்ளிகளை திறப்பது குறித்து அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை 1ம் தேதி) முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளதாக உத்தரவிடப்பட்டது.
மேலும், பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும், அவ்வாறு செலுத்தாதவர்கள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி இல்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஆன்லைன் வகுப்புகளை தொடர உத்தரவிடக்கோரி அப்துல் வகாப் என்பவர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. இதன் போது, "தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறந்தாலும், மாணவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டும் என்பது கட்டாயம் இல்லை" என்று தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் விளக்கம் அளித்துள்ளார்.
0 Comments