ஈரோடு: ஈரோடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி இடையன்காட்டு வலசு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில், ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, நேற்று ஆய்வு செய்தார்.
இதையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு, தனியார் உள்ளிட்ட பள்ளிகள், செப்.,? முதல் செயல்படவுள்ளன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு நேரடியாகவும், ஆன்-லைன் முறையிலும் பாடம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து விதிகளையும், முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறைவணக்க கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சி மற்றும் கலாசார நிகழ்வு தவிர்க்ப்பட வேண்டும். உடற்கல்வி மற்றும் விளையாட்டு பாடவேளை, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை நடவடிக்கைகள் கூடாது.கட்டுப்பாட்டு மண்டலம், தனிமை பகுதி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், கட்டுப்பாட்டு காலம் முடிந்த பிறகு அல்லது கட்டுப்பாட்டு மண்டலம் இல்லை என அறிவிக்கப்பட்ட பிறகே பள்ளிக்கு வரவேண்டும். நோய்த்தொற்று அறிகுறி தென்படும் நபர்கள், உடனடியாக சுகாதாரத்துறையை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 Comments