Ads

தமிழகத்தில் பள்ளி திறப்பு - பெற்றோர்கள் மனதில் எழும் கேள்விகள்

தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், பெற்றோர் மனதில் எழும் கேள்விகளை இப்போது பார்க்கலாம்.
1. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களால் பணம் கொடுத்து தரமான முகக்கவசம் வாங்க முடியுமா? 2. அரசுப் பள்ளி மாணவர்கள் துணியால் ஆன முகக்கவசம் அணிந்து வரலாமா? 3. தரம் குறைந்த துணி மாஸ்கில் இருந்து தொற்று பரவாதா? 4. நியாய விலைக் கடைகளில் மாஸ்க் வழங்கும் திட்டம் என்ன ஆயிற்று? 5. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச முகக்கவசம் கிடைக்குமா? 6. பேருந்துகளில் வருவதைத் தவிர்க்க அரசு கூறியுள்ளது. அனைத்து மாணவர்களாலும் அப்படி வர முடியுமா? 7. சீருடை அணியாத இதர பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் அரசுப் பேருந்தில் இலவசமாக செல்ல முடியுமா? 8. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா? 9. இடைவேளைகளில் மாணவர்கள் கூடுவதை அரசுப் பள்ளிகளில் கட்டுப்படுத்த முடியுமா? 10. உணவு இடைவேளையின்போது மாஸ்க் இல்லாமல் மாணவர்கள் அமருவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? 11. ஒரு இருக்கையில் இருவர் மட்டும் அமருவது அரசுப் பள்ளியில் சாத்தியமா? 12. சானிடைசரை சுகாதாரத் துறை வழங்கவுள்ளது. ஒவ்வொரு வகுப்புக்கும் தரப்படுமா? 13. பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்குமா நடக்காதா என முன்கூட்டியே அறிவிக்கப்படுமா ? 14. பள்ளிகளுக்கு வராமல் ஆன்லைனில் படிப்போருக்கு மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படுமா? இக்கேள்விகளுக்கு தெளிவான விடை கிடைத்தால் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் மனநிம்மதி அடைவர். அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers