ஆசிரியர் குறிப்பு :-
- இதில் வரும் வினாக்கள் ஒவ்வொரு வரியாக படித்து தயார் செய்து இருக்கிறேன்.
- நிச்சயம் வரும் TRBயில் பெரும்பாலான வினாக்கள் கேட்கப்படலாம் என்று நினைக்கிறேன்.
- தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
- வினாக்களின் வரிசை எண்கள் தொடரும்.
- தினமும் 10 வினாக்கள் தயார் செய்ய முயற்சி செய்கிறேன்.
- TRB தேர்வு எழுதும் வருங்கால ஆசிரிய தலைமுறைக்கு இதை பகிர்ந்தளிக்க அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்🙏
இன்று ஒரு கல்வித் தகவல் - 100.
11) குருட்டு மனனம் BLIND MEMORY என்பது
அ) அர்த்தமுள்ள கற்றல் MEANINGFUL LEARNING
ஆ)உணராமல் கற்றல் ROTE LEARNING ✓
இ) தானே கற்றல் SELF LEARNING
12) கற்பித்தல் என்பது மாணாக்கர் ஏற்கனவே பெற்றுள்ள கருத்துகள் அனுபவங்கள் ஆகியவற்றுடன் புதியனவற்றை முன்னறிவுடன் இணைத்தல் என்று கூறியவர் யார்?
அ) ஜான்டூயி
ஆ) புரூனர்
இ) ஹெர்பார்ட் ✓
13) தொடக்க நிலையில் மாணவர்கள் தாமே செயற்பட்டு பலவற்றை கற்பதற்கு "செயற்பள்ளிகள்" என்று கருத்தை கூறியவர் --
அ) ஸ்கின்னர்
ஆ) ஜான்டூயி ✓
இ) ஆசுபெல்
14) செயல்வழிக் கற்றலில் தானே கற்றல் நிலையை நமது பள்ளிகளில் எந்த வகுப்பு வரை பின்பற்றப்படுகிறது?
அ) ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை.
ஆ) ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை.
இ) ஒன்று முதல் நான்கு வகுப்பு வரை ✓
15) கற்றல் என்பது தூண்டுதல், வழிகாட்டுதல் நெறிப்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகிய செயல்களை உள்ளடக்கியது என்று கூறியவர் யார்?
அ) பி ஓ ஸ்மித்
ஆ) கிளார்க்
இ) பார்ட்டன் பி ✓
16) கற்றல் மற்றும் கற்பித்தலில் கீழ்கண்ட செயல்களில் இல்லாதது எது?
அ) வழிகாட்டுதல்
ஆ) நெறிப்படுத்துதல்
இ) தூண்டுதல்
ஈ) புதுமையை புகுத்துதல் ✓
17) கற்போர் தமது உள்ளார்ந்த ஆற்றல்கள், திறன்கள், மனப்பான்மைகள் முதலியவற்றை மேம்படுத்திக்கொள்ள உதவுவது எது?
அ) தூண்டுதல்
ஆ) வழிகாட்டுதல் ✓
இ) நெறிப்படுத்துதல்
18) கற்போர் புதிய செய்திகளை கற்றுகொள்வதற்கு ஊக்கத்தை வளர்ப்பது எது?
அ) வழிகாட்டுதல்
ஆ) நெறிப்படுத்துதல்
இ) தூண்டுதல் ✓
19) கற்பித்தலும் கற்றலும் வெவ்வேறானவை. கற்றலை தூண்டுவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளின் தொகுப்பே கற்பித்தல் ஆகும் என்று கூறியவர் யார்?
அ) கிளார்க்
ஆ) பெஞ்சமின் ப்ளூம்
இ) பி ஓ ஸ்மித் ✓
20) " கற்பித்தல் கோட்பாட்டினை நோக்கி" என்ற நூலை எழுதியவர் யார்?
அ) க்ளார்க்
ஆ) தாமஸ் க்ரீன்
இ) என் எல் காக்னே ✓
நாளையும் தொடரும்.......
TAGS :- #pgtrb,trb2021,commerce,pgtrbcommerce,exam2021,ugcnet,ugc,pgtrb commerce study material free download,pgtrb commerce free online test,pgtrb commerce guide,pgtrb commerce study material in tamil pdf,pgtrb commerce material,pgtrb commerce model question paper,pgtrb commerce mcq questions,pgtrb commerce online mock test,pgtrb commerce new material,pgtrb commerce old question papers,pgtrb commerce online class


0 Comments