முதுகலை ஆசிரியர் தேர்வு 21-22 - உளவியல் முக்கிய வினா விடைகள் - ஆக்கம் உயர்திரு. சின்னதம்பி ஐயா அவர்கள்.
ஆசிரியர் குறிப்பு :-
- இதில் வரும் வினாக்கள் ஒவ்வொரு வரியாக படித்து தயார் செய்து இருக்கிறேன்.
- நிச்சயம் வரும் TRBயில் பெரும்பாலான வினாக்கள் கேட்கப்படலாம் என்று நினைக்கிறேன்.
- தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
- வினாக்களின் வரிசை எண்கள் தொடரும்.
- தினமும் 10 வினாக்கள் தயார் செய்ய முயற்சி செய்கிறேன்.
- TRB தேர்வு எழுதும் வருங்கால ஆசிரிய தலைமுறைக்கு இதை பகிர்ந்தளிக்க அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்🙏
இன்று ஒரு கல்வித் தகவல் - 100.
21) கல்வி நிலையங்களில் இருந்து படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு வெளியேறும் மாணவரின் அடைவுநிலை கற்பித்தல் காரணிகளிள் கீழ்கண்டவற்றில் எது?
அ ) முன்கூட்டியே அறிவிக்கவல்ல காரணிகள் PRESAGE FACTORS
ஆ) நடைமுறைக் காரணிகள் PROCESS FACTORS
இ) உற்பத்தி பொருளை மதிப்பிடல் PRODUCT FACTORS ✓
22) பிரம்மச்சர்யம் என்பது புலனடக்கம். இதுவே கவன குவிப்பை அதிகரிக்கும் என்று கூறியவர் யார்?
அ) காந்தியடிகள்
ஆ) அரவிந்தர்
இ) விவேகானந்தர் ✓
23) கற்றலில் பாடப்புத்தகங்களை எதிர்த்தவர் யார்?
அ) ரூசோ
ஆ) காந்தியடிகள் ✓
இ) மாண்டிசோரி
24) கீழ்கண்ட கல்வியாளர்களில் குழந்தை கல்வியின் வளர்ச்சிக்கு தொடர்பில்லாதவர் யார்?
அ) ரூசோ
ஆ) பெஸ்டலாசி
இ) காந்தியடிகள்
ஈ) புரூனர் ✓
25) மாணவர்கள் தங்களுக்கு ஆர்வம் உள்ள துறையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று கூறியவர் யார்?
அ) அரவிந்தர்
ஆ) தாகூர்✓
இ) விவேகானந்தர்
26) கற்பித்தலில் விரிவுரை முறையை பரிந்துரைத்தவர் யார்?
அ) அரவிந்தர்✓
ஆ) ஜான்டூயி
இ) புரூனர்
27) எதையும் யாருக்கும் கற்பிக்க முடியாது.அவரவர் தானே விரும்பி கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியவர் யார்?
அ) ஆசுபெல்
ஆ) பிரோபெல்
இ) அரவிந்தர் ✓
28) "கற்பவர்களுக்கு பாடங்களை அளிக்காதீர்கள்!! அனுபவங்களை அளியுங்கள்"என்று கூறியவர் யார்?
அ) விவேகானந்தர்
ஆ) ரூசோ ✓
இ) பி ஓ ஸ்மித்
29) நேரடி அனுபவங்களில் இருந்து அறிவை பெறக்கூடிய முறை ------- முறை ஆகும்
அ) சுயகற்றல் முறை SELF LEARNING METHOD
ஆ) முயன்று தவறிக் கற்றல் TRIAL AND ERROR METHOD
இ) தானே கண்டரியும் முறை HEURISTIC METHOD ✓
30) ஹர்பாட்டின் கற்பித்தல் முறை எத்தனை படிநிலைகளைக்கொண்டது?
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) ஐந்து ✓
நாளையும் தொடரும்.......
TAGS :- #pgtrb,trb2021,commerce,pgtrbcommerce,exam2021,ugcnet,ugc,pgtrb commerce study material free download,pgtrb commerce free online test,pgtrb commerce guide,pgtrb commerce study material in tamil pdf,pgtrb commerce material,pgtrb commerce model question paper,pgtrb commerce mcq questions,pgtrb commerce online mock test,pgtrb commerce new material,pgtrb commerce old question papers,pgtrb commerce online class
0 Comments