Ads

முதுகலை ஆசிரியர் தேர்வு 21-22 - உளவியல் முக்கிய வினா விடைகள் - பகுதி 4

முதுகலை ஆசிரியர் தேர்வு 21-22  - உளவியல் முக்கிய வினா விடைகள் -  ஆக்கம் உயர்திரு. சின்னதம்பி ஐயா அவர்கள்.

ஆசிரியர் குறிப்பு :-

  • இதில் வரும் வினாக்கள் ஒவ்வொரு வரியாக படித்து தயார் செய்து இருக்கிறேன். 
  • நிச்சயம் வரும் TRBயில்  பெரும்பாலான வினாக்கள் கேட்கப்படலாம் என்று நினைக்கிறேன்.  
  • தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!! 
  • வினாக்களின் வரிசை எண்கள் தொடரும்.
  • தினமும் 10 வினாக்கள் தயார் செய்ய முயற்சி செய்கிறேன். 
  • TRB தேர்வு எழுதும் வருங்கால ஆசிரிய தலைமுறைக்கு இதை பகிர்ந்தளிக்க அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்🙏


USEFUL LINKS :- 

இன்று ஒரு கல்வித் தகவல் - 100. 

பகுதி - 4

31) ஹர்பாட்டின் படிநிலைகளில் கீழ்கண்டவற்றில் இல்லாதது எது?

அ) ஆயத்தப்படுத்துதல்

ஆ) தொடர்புபடுத்துதல் 

இ) பகுத்தல் ✓

ஈ) பயன்படுத்துதல்

32) கற்றல் என்பது தெரிந்ததில் இருந்து தெரியாததற்கும் உருவ நிலையில் இருந்து அருவ நிலைக்கும் சிந்தனைகளை இட்டுச்செல்ல வேண்டும் என்ற கருத்துடைய கொள்கை

அ)பயனளவைக் கொள்கை

ஆ) சமரசக் கொள்கை

இ) உண்மைக் கொள்கை✓

33) கில்பார்ட் எனும் அறிஞர்  "சமூகச்சூழலில் முழுமனதுடன் செயல்படுத்தப்படுகின்ற பயனுள்ள நோக்கச் செயல்"என்று எந்த கொள்கையில் வலியுருத்துகிறார்?

அ)சமரசக் கொள்கை

ஆ) பயனளவைக் கொள்கை✓

இ) உண்மைக் கொள்கை

34) செயல் திட்டம் எத்தனை படிநிலைகளை உள்ளடக்கியது?

அ) ஒன்று

ஆ) இரண்டு

இ) மூன்று

ஈ) ஐந்து✓

35) பயன்பாட்டு விழுமம் மற்றும் கருவிசார் விழுமங்களை உள்ளடக்கிய கொள்கை எது?

அ)பயனளவைக் கொள்கை

ஆ)உண்மைக் கொள்கை

இ) சமரசக் கொள்கை✓

36)JACK AND JILL: HUMPTY AND DUMPTY: CINDRELA போன்ற பிரபலமான நர்சரி பாடலை உருவாக்கியவர் யார்?

அ)பெஸ்டலாசி

ஆ) மாண்டிசோரி அம்மையார்

இ) ஃபிரோபெல்✓

37) பரிசு, வெகுமதி மற்றும் தொழில் வேலைகள் ஆகியவை குழந்தைகளின் பார்வை, தொடு உணர்ச்சி, படைப்பாற்றலை வளர்க்கின்றன என்று கூறியவர் யார்?

அ) ரூசோ

ஆ)ஜான்டூயி

இ) ஃபுரோபெல்✓

38) பிரச்சனையை அறிதல், திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் மதிப்பிடுதல் ஆகிய படிநிலைகள் எந்த முறையில் ஃபுரோபெல்லால் கடைபிடிக்கப் பட்டது?

அ) செயல் திட்ட முறை PROJECT METHOD

ஆ) புதிர் முறை PROBLEM SOLVING METHOD✓

இ)  செயல்வழிக் கற்பித்தல் முறை ACTIVITY METHOD

39) வகுப்பறையிலோ பள்ளி சூழலிலோ அவ்வப்போது எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு முடிவுகான ஆசிரியரோ தலைமை ஆசிரியரோ எடுத்துக்கொள்ளும் முறையான விஞ்ஞான அடிப்படையிலான செயல்முறை --------- ஆகும்.

அ) திட்டமிட்ட முறை

ஆ) சிக்கல் தீர்க்கும் முறை

இ) செயலாய்வு✓

40) கற்றல் காணப்படுவது --------

அ) மனிதர்களிடம் மட்டும்

ஆ) விலங்குகளிடம் மட்டும்

இ) அனைத்து உயிரிகளிடமும் காணப்படும்✓

நாளையும் தொடரும்.......


TAGS :- #pgtrb,trb2021,commerce,pgtrbcommerce,exam2021,ugcnet,ugc,pgtrb commerce study material free download,pgtrb commerce free online test,pgtrb commerce guide,pgtrb commerce study material in tamil pdf,pgtrb commerce material,pgtrb commerce model question paper,pgtrb commerce mcq questions,pgtrb commerce online mock test,pgtrb commerce new material,pgtrb commerce old question papers,pgtrb commerce online class

Post a Comment

1 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers