தமிழகம் முழுவதும் நாளை முதல் (அக்டோபர் 20) என்ஜினீயரிங் படிப்பிற்கான துணை கலந்தாய்வு ஆரம்பம்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 17 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக மாற்றுத்திறனாளி, விளையாட்டு, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் , அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன.
அரசு பள்ளிகளில் படித்த 7324 இடங்கள், சிறப்பு பிரிவினர் 473 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப். 27 முதல் 4 சுற்றுகளாக நடத்தப்பட்டன. மீதியுள்ள இடங்களை நிரப்புவதற்கான 5ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன்படி, துணை கலந்தாய்வு நாளை, அக்டோபர் 20ம் தேதி புதன்கிழமை தொடங்கப்பட்டு அக்டோபர் 23ம் தேதி சனிக்கிழமை வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு, சான்றிதழ் பதிவேற்றம் முடிவடைந்த நிலையில் தரவரிசை பட்டியல் இன்று அக்டோபர் 19ம் தேதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments