Ads

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு

மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்படும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பிட மாவட்ட ஆணையாளர் அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளார்.


அதில் LKG/ UKG மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக பணியாற்ற ஒப்பந்த அடிப்பைடயில் ஆட்சேர்ப்பு நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வழங்கியுள்ளோம்.




வேலைவாய்ப்பு :

மதுரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணிகளுக்கு என மொத்தமாக 94 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

LKG/ UKG ஆசிரியர்கள் - 63 பணியிடங்கள்
முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு - 31 பணியிடங்கள்

கல்வித்தகுதி :

ஆசிரியர்கள் :

  • 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மாண்டிசோரி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருப்பது நல்லது.

முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு :

  • கணினி அறிவியல், வணிகவியல், வணிக கணிதம், பொருளியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அதனோடு சேர்த்து B.Ed தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருப்பது நல்லது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் குறைந்தபட்சம் ரூ.10.000/- முதல் அதிகபட்சம் ரூ.12,000/- வரை ஊதியம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 27.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி - ஆணையாளர், மதுரை மாநகராட்சி, அறிஞர் அண்ணா மாளிகை, தல்லாகுளம், மதுரை - 625002

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers