Ads

தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாத ஆசிரியர்கள் பிறர் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் நல்லது - சென்னை உயர்நீதிமன்றம்

தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாத ஆசிரியர்கள் பிறர் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் நல்லது' என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை கட்டாயப்படுத்தக் கூடாது என பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு கூறியதாவது;

'மாணவர்கள் நலன்கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம். தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாத ஆசிரியர்கள் பிறர் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் நல்லது.

இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், பிற்காலத்தில் மாற்று கூட வரலாம். மாணவர்களின் நலன் கருதிதான் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது, பொதுநலனுக்கு எதிரான வழக்கு' என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers