தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரி திறக்கப்பட்டன. கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த முறை தேர்வுகள் நடைபெறாததால், விடுமுறை எப்போது விடப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே எழுந்துள்ளது. இந்நிலையில், வரும் 25 ஆம் தேதி முதல், ஜனவரி மாதம் 2 ஆம் தேதி வரை என மொத்தம் 9 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ஆனால், இதுவரை அரசு தரப்பில் எந்த தகவலும் வெளியாகததால் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும் பண்டிகை காலங்களில் ஆசிரியர்கள் சொந்த ஊருக்கு செல்ல அரையாண்டு விடுமுறை வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது.
இந்நிலையில் பண்டிகை கால விடுமுறை தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
0 Comments