Ads

மாணவர்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப புதிய ஆசிரியர் பணியிடம் தோற்றுவிக்க பெற்றோர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதை காட்டிலும் ஒவ்வொரு பள்ளியிலும் விகிதாசார அடிப்படையில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர் முன்வைக்கின்றனர்.



அரசு மற்றும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிக்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இதன்கீழ் தமிழகம் முழுவதும், 2 ஆயிரத்து, 774 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.உரிய கல்வித்தகுதி உடையவர்களை பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழகம் தேர்வு செய்து கொள்ளலாம். தொகுப்பூதியமாக, 10 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான மேல்நிலை பள்ளிகளில், பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் உருவான காலிப்பணியிடங்கள் மிகக்குறைவு.

 அதேசமயம், மாணவர் - ஆசிரியர் விகிதாசாரத்திற்கு ஏற்ப தோற்றுவிக்கப்படாத பணியிடங்கள் அதிகமாக உள்ளன.இதுகுறித்து பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது:அரசு பள்ளிகளில் நடப்பாண்டு, தமிழ், ஆங்கிலம், வணிகவியல் பொருளியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களை உள்ளடக்கிய பிரிவுகளில் வழக்கத்தை காட்டிலும் அதிக மாணவர்கள் சேர்க்கை நடந்திருக்கிறது.


மேலும், 40 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற வகையில் கணக்கிட்டால் ஒவ்வொரு பள்ளிக்கும் குறைந்தது, 5 - 15 வரை ஆசிரியர் தேவை இருக்கிறது.அரசு அறிவித்த தொகுப்பூதிய நியமனம் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதன்மூலம் அதிகபட்சம், ஓரிரு ஆசிரியர்கள் மட்டுமே நிரப்ப முடியும்.விகிதாசார அடிப்படையில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தால் மட்டுமே அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்தமுடியும். தொகுப்பூதிய அடிப்படையிலாவது தோற்றுவிக்க அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers