Ads

வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள், தற்போதுள்ள சலுகை காலத்தில் மீண்டும் அதை புதுப்பிப்பது எப்படி?

வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள், தற்போதுள்ள சலுகை காலத்தில் மீண்டும் அதை புதுப்பிப்பது எப்படி? என்பது பற்றிய தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

புதுப்பிப்பு சலுகை தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

கடந்த 2014, 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகைக்கான அரசாணையை 
தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை 2-ந்தேதி வெளியிட்டது.

எப்படி புதுப்பிக்க வேண்டும்?

அரசாணையில் தெரிவித்தபடி, இச்சிறப்பு சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் 3 மாதங்களுக்குள் அதாவது அடுத்த 2022-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதிக்குள் இணையம் வழியாக தங்கள் பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம். 

இதையும் படியுங்கள் :- 2014 முதல் 2019 வரை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு தவறவிட்டவர்களுக்கு புதுப்பிக்க மற்றொரு வாய்ப்பு

இணையம் வழியாக பதிவை புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள், மேற்குறிப்பிட்ட தேதிக்குள் தொடர்புடைய வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக சென்றோ அல்லது பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக்கொள்ளலாம்.

 இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers