Ads

அரசு பள்ளிகளில் நாளுக்கு நாள் மாணவர் எண்ணிக்கையில் சரிவு

சேலம்: அரசு பள்ளிகளில் நாளுக்கு நாள் மாணவர் எண்ணிக்கையில் சரிவு ஏற்படுவதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கொரோனா இரண்டாம் அலைக்கு பின், செப்டம்பரில் தான் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. கல்வியாண்டில் குறைந்த நாளே உள்ளதால், திங்கள் முதல் சனிக்கிழமை வரை வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது. தற்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. 10, பிளஸ் 1, பிளஸ் 2க்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ஆனால், கொரோனா சூழலால், நேரடி வகுப்புக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக சனியான நேற்று, பல பள்ளிகளில் பாதிக்கும் குறைவான மாணவர்களே வந்திருந்தனர். இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், 'தமிழக அரசின் ஊரடங்கு உள்ளிட்ட அறிவிப்புகளும், கட்டுப்பாடுகளும், பெற்றோர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு வரும் மாணவர் வருகை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. குறிப்பாக பிளஸ் 1 மாணவர்களை பள்ளிக்கு வரவைப்பது இயலாத காரியமாக உள்ளது' என்றனர்.
x

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers