சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுக்கான கால அட்டவணை தயாராகியுள்ளது. இந்த அட்டவணையை இன்னும் இரண்டு நாட்களில், அதிகாரப்பூர்வமாக வெளியிட, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும்பிளஸ் 2வுக்கு பொது தேர்வுநடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்னையால், தேர்வு நடத்தாமல் அனைவருக்கும், 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது. இந்தாண்டு செப்டம்பர் முதல் அவ்வப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வை, ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. இதற்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அட்டவணைக்கு, முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து, பொது தேர்வு காலஅட்டவணையை, பள்ளிக்கல்வி அமைச்சர் நேற்று மாலை வெளியிடுவதாக இருந்தது. பின், அறிவிப்பு திடீரென தள்ளிவைக்கப்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் பொது தேர்வு கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாக, பள்ளிக்கல்வி கமிஷனரக வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments