Ads

பிளஸ் 1 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக உற்சாகமூட்டும் வகையில் தேர்வு

பிளஸ் 1 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக உற்சாகமூட்டும் வகையில் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தற்போது, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் 11ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இதுவரை அவர்களுக்கு எந்த தேர்வு நடத்தப்படவில்லை. எனவே 11ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்தாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், பிளஸ் 1 மாணவர்களை தயார்படுத்தும் விதமாக உற்சாகமூட்டும் தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் பல மாவட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல், இதுவரை நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து ஒவ்வொரு பாடத்திற்கும் சுமார் ஒன்றரை மணி நேரம் தேர்வு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தேர்வு மாணவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தும் விதமாக இல்லாமல் கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக இருக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

1 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers