சென்னை: காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
அதன்படி, தமிழ் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். தமிழ் தகுதி தேர்வில் வெற்றி பெறுவோரின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் மட்டுமே திருத்தப்படும் என்று அறிவிப்பட்டிருக்கிறது. தமிழ் தகுதி தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

0 Comments