- பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்னால், காலை 8 மணிக்கு மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வருகை தர வேண்டும்.
- 9.45 மணிக்கு முதல் மணி ஒரு முறை அடிக்கப்படும். மாணவர்கள், தேர்வறைக்கு செல்ல வேண்டும்.
- அடுத்த 10 நிமிடத்தில் இரண்டாவது மணி இருமுறை அடிக்ப்படும்.
- அறை கண்காணிப்பாளர் வினாத்தாள் உறைகளை மாணவர்களிடம் காண்பித்து இரு மாணவர்களிடம் கையொப்பம் பெற்று உறைகளை பிரிப்பார்.
- 10 மணியளவில் மூன்றாவது மணி 3 முறை அடிக்கப்படுவம். தேர்வர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும்
- மாணவர்கள், கேள்வித்தாளை படித்து பார்ப்பதற்கு 10 நிமிடங்கள் வழங்கப்படும்
- சரியாக 10.10 மணிக்கு, 4வது மணி நான்குமுறை அடிக்ப்படும். தேர்வர்களுக்கு விடைத்தாள்கள் கொடுக்கப்படும். 10.15 மணிக்கு 5வது மணி அடிக்கப்பட்டதும் மாணவர்கள் பரீட்சை எழுத ஆரம்பிக்கலாம்.
- மூன்று மணி நேரம் கழித்து, பிற்பகல் 1.30 மணியளவில் விடைத்தாள்கள், மாணவர்களிடமிருந்து பெறப்படும்
- தேர்வில் விடைத்தாள்களை மாற்றி எழுதினால், ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு பரீட்சை எழுத தடை விதிக்கப்படும்
- ஆள்மாறாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டால், தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும்.
- தேர்வு மையங்களுக்கு மாணவர்களும், தேர்வு பணியில் இருக்கும் ஆசிரியர்களும் செல்போன் கொண்டு வரக் கூடாது
- ஒழுங்கீன செயல்களில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்படும்
- மேலும் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- குறிப்பாக, மாணவர்கள் முகக்கவசம் அணிந்து தேர்வெழுத வேண்டிய அவசியமில்லை என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
0 Comments