அந்தவகையில் வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படும்/பெறப்படும் செய்தியை மறைய வைக்கும் வசதி சமீபத்தில் அறிமுகமாகியிருக்கிறது.
அதாவது ஒருவருக்கு அனுப்பும் செய்தியை அல்லது ஒருவரிடம் இருந்து பெறும் செய்தி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மறைந்துபோகும்.
இதற்கான கட்டுப்பாடு பயனர்களின் கையில் இருக்கும். 'Disappearing Messages' என்ற வசதியை பயன்படுத்தி செய்திகளை மறைய வைக்கலாம். இதில் '7 நாள்கள்' என்ற வசதி தற்போது உள்ளது. அதாவது நீங்கள் அனுப்பும் அல்லது பெறப்படும் செய்தி 7 நாள்களில் மறைந்துபோகும்.
இந்நிலையில், இத்துடன் '24 மணி நேரம்' என்ற நேர கட்டுப்பாட்டை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்த உள்ளது.இதன்படி பயனர், 'Disappearing Messages' வசதியை 'ஆன்' செய்து, '24 மணி நேரம்' என்பதை தேர்வு செய்தால் நீங்கள் அனுப்பும்/பெறப்படும் செய்தி அடுத்த 24 மணி நேரத்தில் மறைந்து போய்விடும். ஆனால், அது மறைவதற்கு முன்பாக ஸ்கீரீன் ஷாட் எடுத்து சேமிக்க முடியும்.24 மணி நேரத்தில் செய்திகள் மறைந்துபோகும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.
வாட்ஸ்ஆப்பில் ஏதேனும் ஒரு தொடர்பை(Contacts) தேர்வு செய்து, மேலே தொடர்பை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் தேர்வு செய்த நபரின் விவரங்களுக்கு கீழே 'Disappearing Messages' வசதி இருக்கும். இதனை 'ஆன்' செய்து செய்திகள் மறையும் இந்த வசதியை பயன்படுத்தலாம்.
0 Comments