ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வயதான குடிமக்கள் எளிதாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யபட்டுள்ளது.
இப்போது உங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க நீண்ட மணிநேரம் காத்திருக்க வேண்டியதில்லை. ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வயதான குடிமக்கள் எளிதாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் சுமார் 68 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவார்கள் என்று அரசாங்கம் கூறியது, அவர்கள் இப்போது மொபைல் செயலியைப் பயன்படுத்தி ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க முடியும்.
தனித்துவ தொழில்நுட்பத்தை மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்த பின் பேசுகையில், "ஆயுள் சான்றிதழை வழங்கும் முகம் அடையாளம் காணும் நுட்பம் ஒரு வரலாற்று மற்றும் தொலைநோக்கு சீர்திருத்தமாகும், ஏனெனில் இது 68 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர் மட்டுமல்ல, கோடிக்கணக்கான ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையையும் இது எளிதாகும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்ற இந்தத் துறையின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் உட்பட சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் எளிதாக வாழ்வதற்கு எப்பொழுதும் முயன்று வருவதாகவும், அவர்களின் அனைத்து அனுபவங்களுடனும், நீண்ட ஆண்டுகள் அவர்கள் ஆற்றிய சேவையுடனும் நாட்டின் சொத்தாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார். டிஜிட்டல் ஆயுள் சான்றிதழின் அறிமுகம், இந்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும் ஓய்வூதிய வழக்குகளைத் தீர்ப்பதற்கு பொது மென்பொருளை அறிமுகம் செய்தாலும், இந்த இலக்கை அடைய ஓய்வூதியத் துறையானது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
0 Comments