Ads

12ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் ஒரு மதிப்பெண் தேர்வு -01

 12ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல்  

ஒரு மதிப்பெண் தேர்வு 

Based on Reduced Syllabus

Prepared by G.Prakash.M.Com.M.Phil.B.Ed.D.TEd.,

Contact ; 9488270034


இந்த தேர்வையும் எழுதி பாருங்க 

தமிழ்                 -        Click here

வணிகவியல்  -          Click here

Subscribe to Our You tube Channel 👇👇👇👇👇


1. முழுமை பெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது ___________

  • a : அ) அரசு
  • b : ஆ) பன்னாட்டு நிறுவனங்கள்
  • c : இ) சிறிய அளவிலான தனி ஆள் வணிகம்
  • d : ஈ) நிறுமம்

2. கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது

  • a : அ) பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு
  • b : ஆ) மொத்தக் கடனீந்தோர் கணக்கு
  • c : இ) மொத்தக் கடனாளிகள் கணக்கு
  • d : ஈ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

3. The amount of credit sales can be computed from ___________

  • a : (a) Total debtors account
  • b : (b) Total creditors account
  • c : (c) Bills Receivable account
  • d : (d) Cash paid for bills payable

4. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு

  • a : அ). பெயரளவு கணக்கு
  • b : ஆ). சொத்து கணக்கு
  • c : இ). ஆள்சார் கணக்கு
  • d : ஈ). பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

5. ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள் , ஆண்டு சந்தாவாக ` 100 செலுத்துகின்றனர். நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ` 200; முன்கூட்டிப் பெற்ற சந்தா ` 300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.

  • a : 50000
  • b : 50200
  • c : 49900
  • d : 49800

6. கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாத போது முதல் மீது வட்டி

  • a : (அ) வழங்கப்படுவதில்லை
  • b : (ஆ)வங்கி வீதத்தில் வழங்கப்படும்
  • c : (இ) ஆண்டுக்கு 5 % வழங்கப்படும்
  • d : (ஈ) ஆண்டுக்கு 6% வழங்கப்படும்

7. ஒரு கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழக்கமாக எடுத்துக் கொள்ளும் போது, அந்த எடுப்புகள் மீது கணக்கிடப்படும் வட்டிக்குரிய மாதங்கள் சராசரியாக

  • a : 5.5 மாதங்கள்
  • b : 6.5 மாதங்கள்
  • c : 6 மாதங்கள்
  • d : 5 மாதங்கள்

8. கீழ் வருவனவற்றில் எது சரியானது?

  • a : (அ) உயர் இலாபம் = மொத்த இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை
  • b : (ஆ) உயர் இலாபம் = கூட்டு இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை
  • c : (இ) உயர் இலாபம் = சராசரி இலாபம் – சாதாரண இலாபம்
  • d : (ஈ) உயர் இலாபம் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகள்

9. மறுமதிபீட்டுக் கணக்கு ஒரு

  • a : (அ) சொத்து க/கு
  • b : (ஆ) பெயரளவு க/கு
  • c : (இ) ஆள்சார்க/கு
  • d : (ஈ) ஆள்சாராக/கு

10. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

  • a : (அ) மறுமதிப்பீட்டு இலாபம்
  • b : (ஆ) பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்
  • c : (இ) புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்
  • d : (ஈ) முதலீட்டு மாறுபடும்நிதி

11. A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4:2:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகுகிறார். A மற்றும் B யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் _____

  • a : 4:3
  • b : 3:4
  • c : 2:1
  • d : 1:2

12. ஒரு கூட்டாளி விலகலின்போது, ஆதாய விகிதத்தின் நிர்ணயம் எதற்கு தேவைப்படுகிறது?

  • a : (அ) மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம் மாற்றப்படுவதற்கு
  • b : (ஆ) பகிர்ந்து தராஇலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்தளிப்பதற்கு
  • c : (இ) நற்பெயரை சரிக்கட்டுவதற்கு
  • d : (ஈ) மேற்கண்டஎதுவுமில்லை

13. முன்னுரிமைப் பங்கு என்பது

  • a : (i) நிலையான விகிதத்தில் பங்காதாயம் செலுத்துவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு
  • b : (ii) கலைப்பின் போது பங்கு முதலை திரும்பப் பெறுவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு
  • c : (அ) (i) மட்டும் சரியானது (ஆ) (ii) மட்டும் சரியானது
  • d : (இ) (i) மற்றும் (ii) சரியானது (ஈ) (i) மற்றும் (ii) தவறானவை

14. முகமதிப்பைவிட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு

  • a : பத்திர முனைமக் கணக்கு
  • b : அழைப்பு முன்பணக் கணக்கு
  • c : பங்குமுதல் கணக்கு
  • d : பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு

15. இருப்புநிலைக் குறிப்பு, வணிக நிறுவனத்தின் நிதிநிலை பற்றிய தகவல்களை வழங்குகிறது.

  • a : (அ) ஒரு காலக்கட்டத்திற்கு மேலான
  • b : (ஆ) ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய
  • c : (இ) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான
  • d : (ஈ) குறிப்பிட்ட கணக்காண்டிற்குரிய

16. ஒரு வரையறு நிறுமத்தின் விற்பனை` 1,25,000 லிருந்து ` 1,50,000 க்கு அதிகரித்துள்ளது. இது ஒப்பீட்டு வருமான அறிக்கையில் எவ்வாறு தோன்றுகிறது ?

  • a : +20
  • b : +120
  • c : -20
  • d : -120

17. சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் நீங்கலாக உள்ள நடப்புச் சொத்துக்கள் அழைக்கப்படுவது.

  • a : (அ) காப்புகள்
  • b : (ஆ) புலனாகும் சொத்துக்கள்
  • c : (இ) நிதி
  • d : (ஈ) விரைவு சொத்துக்கள்

18. பங்குதாரர் நிதிக்கும் மொத்த சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரம்

  • a : (அ) உரிமையாளர் விகிதம்
  • b : (ஆ) முதல் உந்துதிறன் விகிதம்
  • c : (இ)புற அக பொறுப்பு விகிதம்
  • d : (ஈ) நடப்பு விகிதம்

19. F11 எனும் பயன்பாடு

  • a : (அ) நிறுவனப் பண்பு கூறுகள்
  • b : (ஆ) கணக்கியல் சான்றாவணங்கள்
  • c : (இ) நிறுவன கட்டமைப்பு
  • d : (ஈ) இவைகளில் எதுவும் இல்லை

20. Tally-ல் எது முன்கூட்டியே வரையறுக்கப்படாத குழு?

  • a : (அ)அனாமத்து க/கு
  • b : (ஆ) கொடுபட வேண்டிய செலவு க/கு
  • c : (இ) விற்பனைக/கு
  • d : (ஈ) முதலீடுகள்க/கு

21. Tally-யின் நுழைவாயிலிலிருந்து இருப்பாய்வை பார்வையிட எந்த விருப்பத் தேர்வு பயன்படும்?

  • a : Gateway of Tally -> Reports -> Trial Balance
  • b : Gateway of Tally -> Trial Balance
  • c : Gateway of Tally -> Report -> Display - > Trial Balance
  • d : இவைகளில் ஏதுவுமில்லை

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers